மேற்கு வங்காளத்தில் இறுதிக்கட்ட தேர்தல் - 76 சதவீதம் வாக்குப்பதிவு

மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற இறுதிக்கட்ட தேர்தலில் அம்மாநில கவர்னர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
கவர்னர் ஜெகதீப் தங்கார் தன் மனைவியுடன் வாக்களித்தார்
கவர்னர் ஜெகதீப் தங்கார் தன் மனைவியுடன் வாக்களித்தார்
Published on

மேற்கு வங்காள மாநிலத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. 8-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது.

மால்டா பாகம் 2, கொல்கத்தா வடக்கு, முர்ஷிதாபாத் பாகம் 2, பிர்பும் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 35 தொகுதிகள் தேர்தலை சந்தித்தன. 35 பெண்கள் உள்பட 283 வேட்பாளர்கள் இறுதிக்கட்ட தேர்தல் களத்தில் உள்ளனர். அவர்களின் வெற்றி, தோல்வியை 84 லட்சத்து 77 ஆயிரத்து 728 வாக்காளர்கள் தீர்மானிக்கின்றனர்.
 
மொத்தம் உள்ள 11 ஆயிரத்து 860 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டன. மக்கள் ஆர்வமுடன் வந்து நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குக்களைப் பதிவு செய்தனர்.
அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் மற்றும் பிரபலங்கள் காலையிலேயே வாக்குகளைப் பதிவு செய்தனர். கவர்னர் ஜெகதீப் தங்கார் தன் மனைவி சுதீஷ் தங்காருடன், கொல்கத்தா சோரிங்கீ வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com