திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான 68 கடைகளை மூட உத்தரவு

ஏலம் எடுக்காமல் வியாபாரிகள் தவிர்த்து வந்ததால் திருத்தணி முருகன் கோவில் மலைப்பகுதி மற்றும் கீழே இருந்த 68 கடைகளையும் அதிரடியாக மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
கடைகள் மூடப்பட்டுள்ள காட்சி.
கடைகள் மூடப்பட்டுள்ள காட்சி.
Published on

பள்ளிப்பட்டு:

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மலை மேல் அமைந்துள்ள முருகன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கடைகள் கட்டப்பட்டு ஏலத்தின் மூலம் வாடகைக்கு விடப்பட்டது. இதில் பூக்கடை, தேங்காய் விற்பனை கடை, சிற்றுண்டி சாலை, தேனீர் கடை, குளிர்பான கடைகள் உள்பட பல கடைகள் உள்ளன.

அதேபோல் மலையின் கீழ் பகுதியில் சன்னதி தெரு, அரக்கோணம் சாலை, கார்த்திகேயன் குடில் அருகில், விநாயகர் கோவில் சிக்னல் அருகே மொத்தம் 68 கடைகள் வாடகைக்கு விடப்பட்டன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா நோய்த்தொற்று ஊரடங்கு காரணமாக கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. இதனால் இந்த கடைகளை வாடகைக்கு ஏலம் விடுவதும் தள்ளிவைக்கப்பட்டது.

ஊரடங்கு தளர்த்தப்பட்டு கடைகள் திறக்கப்பட்ட நிலையில், வியாபாரிகள் தங்களுக்கு வருமானம் இல்லாததால், ஏலம் நடத்த வேண்டாமென்று கோரிக்கை வைத்தனர். மேலும், வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து இந்த கடைகளை ஏலம் எடுக்க முன்வரவில்லை. தொடர்ச்சியாக வியாபாரிகள் ஏலம் எடுக்காமல் தள்ளி வைக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கோவில் நிர்வாகம் சார்பில் இணை ஆணையரும், செயல் அலுவலருமான பழனிகுமார், உதவி ஆணையர் ரமணி ஆகியோர் நேற்று திருத்தணி முருகன் கோவில் மலைப்பகுதி மற்றும் கீழே இருந்த 68 கடைகளையும் அதிரடியாக மூட உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com