67வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று நடைபெறுகிறது

தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், பார்த்திபன் நடித்து வெளியான ஒத்த செருப்பு திரைப்படத்திற்கு ஜூரி சிறப்பு விருது வழங்கப்பட உள்ளது.
ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்
Published on

டெல்லியில் உள்ள விக்யான் பவனில் இன்று 67வது தேசிய திரைப்பட விருதுகள் விழா நடைபெறுகிறது. ஆண்டுதோறும் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர், சிறந்த பிராந்திய திரைப்படங்கள் உள்பட  பல்வேறு பிரிவுகளின் கீழ் தேசிய விருதுகள் வழங்கப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு விழா நடைபெறாமல் இருந்த நிலையில், 2019ம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெறுகிறது.

நடிகர் ரஜினிகாந்திற்கு இந்திய திரைப்பட விருதில் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது இன்று வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்...உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பெங்களூரு சிறுவன்

X

Maalai Malar
www.maalaimalar.com