தஞ்சை மாவட்டத்தில் 6 தாசில்தார்கள் பணியிட மாற்றம்

தஞ்சை மாவட்டத்தில் 6 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் தாசில்தார் நிலையில் நிர்வாக நலன் கருதி மாறுதல் மற்றும் நியமனம் செய்யப்பட்டுள்ளது.

தஞ்சை கோட்ட கலால் அலுவலர் சிவக்குமார் தஞ்சை வருவாய் கோட்ட அலுவலரின் நேர்முக உதவியாளராகவும், தஞ்சை வருவாய் கோட்ட அலுவலரின் நேர்முக உதவியாளர் பூங்கொடி திருவையாறு ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தாராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

திருவையாறு ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் சங்கர் பேராவூரணி வட்ட வழங்கல் அலுவலராகவும், தஞ்சை வட்ட வழங்கல் தனி தாசில்தார்(வரவேற்பு) அருள்பிரகாசம் திருவையாறு சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

திருவையாறு சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் இளங்கோ மாறுதல் செய்யப்பட்டு தஞ்சை அலுவலக மேலாளராகவும்(குற்றவியல்), இப்பணியில் இருந்த ரத்தினவேல் தஞ்சை அலுவலக மேலாளராகவும்(பொது) நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே தஞ்சை அலுவலக மேலாளராக(குற்றவியல்) இருந்த திருமால் மருத்துவ விடுப்பிலும், பேராவூரணி வட்ட வழங்கல் அலுவலராக இருந்த கிரு‌‌ஷ்ணகுமார் நீதித்துறை நடுவர் பயிற்சிக்கும் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com