திருச்சி அருகே லாட்டரி சீட்டுகள் விற்ற 5 பேர் கைது

திருச்சி அருகே லாட்டரி சீட்டுகள் விற்ற 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

தா.பேட்டை:

தா.பேட்டை அருகே உள்ள மேட்டுப்பாளையத்தில், ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான போலீசார் மேட்டுப்பாளையம் பஸ்நிலையம், கடைவீதி உள்ளிட்ட பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

அப்போது மேட்டுப்பாளையம் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்ற சிவபிரகாசம் (வயது 60), ராமநாதன் (54), சீனிவாசன் (38), சந்தானம் (56), சுப்பிரமணி (52) ஆகிய 5 பேரை தனிப்படைபோலீசார் கைது செய்து தா.பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், அவர்களிடமிருந்து 5 செல்போன்கள், ரூ.15 ஆயிரம் ரொககம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.தா.பேட்டை:

தா.பேட்டை அருகே உள்ள மேட்டுப்பாளையத்தில், ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான போலீசார் மேட்டுப்பாளையம் பஸ்நிலையம், கடைவீதி உள்ளிட்ட பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

அப்போது மேட்டுப்பாளையம் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்ற சிவபிரகாசம் (வயது 60), ராமநாதன் (54), சீனிவாசன் (38), சந்தானம் (56), சுப்பிரமணி (52) ஆகிய 5 பேரை தனிப்படைபோலீசார் கைது செய்து தா.பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், அவர்களிடமிருந்து 5 செல்போன்கள், ரூ.15 ஆயிரம் ரொககம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

X

Maalai Malar
www.maalaimalar.com