இந்த ஆண்டில் எல்லையில் 4 ஆயிரம் முறை அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவம்

பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி எல்லையில் தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது.
பாதுகாப்புப் பணியில் ராணுவ வீரர்
பாதுகாப்புப் பணியில் ராணுவ வீரர்
Published on

புதுடெல்லி:

போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி எல்லையில் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாகக் கொண்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 4 ஆயிரத்து 52 முறை பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. 

நவம்பர் மாதத்தில் மட்டும் 128 முறை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறியுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன.

கடந்த ஆண்டு 3,233 முறை பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியிருக்கிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com