

துவரங்குறிச்சி:
துவரங்குறிச்சியில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்றதாக துவரங்குறிச்சியை சேர்ந்த சித்திக்(வயது 39), மாணிக்கம் (53), செந்தில்குமார்(40) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 3 செல்போன்கள், ஒரு கார், மற்றும் ரூ.1,150 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.