திருக்கோவிலூர் அருகே சாதி பெயரை சொல்லி திட்டிய 3 பேர் கைது

திருக்கோவிலூர் அருகே சாதி பெயரை சொல்லி திட்டிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருக்கோவிலூர்:

திருக்கோவிலூர் அருகே உள்ள தண்டரை ஒட்டம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் ராஜேந்திரன் (வயது 45). சம்பவத்தன்று இவருக்கும் ஒட்டம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மகன் முனியன் (24), பழனி மகன் லிங்கேஸ்வரன் (22), அய்யனார் மகன் தினேஷ் (22) ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. 

அப்போது ஆத்திரமடைந்த முனியன் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து ராஜேந்திரனை சாதி பெயரை சொல்லி திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் சாதி பெயரை சொல்லி திட்டி, தாக்கிய முனியன் உள்ளிட்ட 3 பேரை அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருப்பதி, சப்-இன்ஸ்பெக்டர் புனிதவள்ளி மற்றும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com