சோமாலியாவில் கார் குண்டு வெடிப்பில் 20 பேர் பலி

சோமாலியாவில் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் ஆதரவு பெற்ற அல் ஷபாப் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மொகாதிசு:

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் ஆதரவு பெற்ற அல் ஷபாப் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

இவர்கள் போலீசார், ராணுவ வீரர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். குறிப்பாக தலைநகர் மொகாதிசுவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கும் நட்சத்திர ஓட்டல்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதை அவர்கள் வழக்கமாக கொண்டு உள்ளனர்.

இந்த நிலையில் மொகாதிசுவில் துறைமுகத்துக்கு அருகே உள்ள ஒரு ஓட்டல் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது.

அப்போது வெடிகுண்டுகள் நிரப்பிய காரை ஓட்டி வந்த பயங்கரவாதி ஓட்டலின் நுழை வாயிலின் முன்பு காரை நிறுத்தி வெடிக்கச் செய்தார். அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.‌ இதில் அந்த பகுதியே அதிர்ந்தது.‌ கார் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து பயங்கரவாதிகள் துப்பாக்கிகளுடன் ஓட்டலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

பயங்கரவாதிகளின் இந்த கொடூர தாக்குதலில் 20 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 30-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு அல் ஷபாப் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.‌

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com