2 டன் எடையுள்ள அரிய வகை திமிங்கல சுறா சிக்கியது

சென்னை காசிமேடு மீனவர்கள் வலையில் 2 டன் எடையுள்ள அரிய வகை திமிங்கல சுறா சிக்கியது.
2 டன் எடையுள்ள அரிய வகை திமிங்கல சுறா
2 டன் எடையுள்ள அரிய வகை திமிங்கல சுறா
Published on

திருவொற்றியூர்:

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து எண்ணூர் பெரியகுப்பம் பகுதியை சேர்ந்த ஜலந்தர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் சிலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆழ்கடலுக்குள் சென்று மீன் பிடித்து கொண்டு இருந்தனர். அவர்கள் விரித்த வலையில் பெரிய மீன் ஒன்று சிக்கியது. உடனே மீனவர்கள், அந்த மீனை கரைக்கு இழுத்து வந்தனர்.

கரைக்கு வந்ததும் அந்த மீன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது. சுமார் 2 டன் எடையுள்ள அந்த மீன், திமிங்கல சுறா வகையை சேர்ந்தது என்பது தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த மீன் வளத்துறை அதிகாரிகள், திமிங்கல சுறா அழிந்து வரும் அரிய வகை மீன் என்பதால் அதை பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது. எனவே அதை மீண்டும் கடலில் விட்டு விடுமாறு அறிவுறுத்தினர்.

இதையடுத்து மீனவர்கள் கிரேன் மூலம் கயிறு கட்டி திமிங்கல சுறாவை மீண்டும் கடலில் கொண்டு சென்று விட்டு விட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com