ம.பி.யில் குழந்தையை காப்பாற்ற கிணற்றில் விழுந்த கிராம மக்கள் - 2 பேர் பரிதாப பலி

குழந்தையை காப்பாற்ற முயன்று கிணற்றில் விழுந்த கிராம மக்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
விபத்து நடந்த பகுதி
விபத்து நடந்த பகுதி
Published on

போபால்:

மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் உள்ள கஞ்ச்பசோதா என்ற கிராமத்தில் குழந்தை ஒன்று கிணற்றில் தவறி விழுந்துள்ளது. அந்தக் குழந்தையை காப்பாற்றுவதற்காக கிராம மக்கள் கிணற்றின் அருகில் திரண்டு வந்துள்ளனர். 

அப்போது கிணற்றின் சுற்றுச்சுவரில் அதிக பாரம் ஏற்பட்டதால், அது இடிந்து விழுந்துள்ளது. இதனால் கிணற்றை ஒட்டி நின்று கொண்டிருந்த சுமார் 15க்கும் மேற்பட்டோர் கிணற்றுக்குள் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்ததும் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டன.

கிணற்றில் இருந்து காயமடைந்த நிலையில் பலர் மீட்கப்பட்ட நிலையில், 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும் கிணற்றுக்குள் சிக்கியிருக்கும் 15 பேரை மீட்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அதே சமயம் காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அறிந்த மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சவுகான் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com