பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் வழியாக எல்லையில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் வழியாக எல்லையில் ஆயுதங்களுடன் ஊடுருவ முயன்ற 2 பயங்ரவாதிகளை பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுடெல்லி:

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் எல்லை வழியாக ஊடுருவ முயற்சிப்பதும், அதை இந்திய ராணுவ வீரர்கள் முறியடிப்பதும் அடிக்கடி நிகழும் சம்பவமாகும்.

இந்த நிலையில் பஞ்சாப் எல்லை வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர். பஞ்சாப்பில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதியில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் பயங்கரவாதிகள் ஊடுருவும் முயற்சியில் ஈடுபட்டனர்.

எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் (பி.எஸ்.எப்.) பார்த்ததும் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்புப் படை வீரர்கள் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டனர்.

ஆயுதங்களுடன் ஊடுருவ முயன்ற 2 பயங்ரவாதிகளை பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டுக்கொன்றனர். அட்டாரி பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. அந்த பகுதியில் பயங்கரவாதிகள் மேலும் பதுங்கியிருக்கிறார்களா என்று பி.எஸ்.எப் வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் அங்கு அடர்த்தியான மூடுபனி இருப்பதால் தேர்தல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com