திருவள்ளூர் அருகே வாலிபருக்கு கத்திக்குத்து- 2 பேர் கைது

திருவள்ளூர் அருகே முன்விரோதத்தில் வாலிபரை கத்தியால் குத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள திருமழிசை பகுதியை சேர்ந்தவர் ஜீவா (வயது 20). நேற்று முன்தினம் ஜீவா வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த திருமழிசை ஜவகர் தெருவை சேர்ந்த கவுதம் (26), பார்த்திபன், கவுரிசங்கர் (20) ஆகிய 3 பேரும் ஏற்கனவே தங்களுக்குள் இருந்த முன்விரோதத்தில் தகாத வார்த்தைகளை பேசி உள்ளனர்.

அப்போது கவுதம் தான் வைத்திருந்த கத்தியால் ஜீவாவை குத்தியதில் காயமடைந்தார். இந்த சம்பவம் குறித்து ஜீவா வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து கவுதம், கவுரிசங்கர் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய பார்த்திபனை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com