மின்னல் தாக்கி 13 ஆடுகள் பலி

மின்னல் தாக்கியதில், பலியான ஆடுகளை பார்வையிட்ட கால்நடை மருத்துவர் கார்த்திகேயன் மற்றும் வருவாய்த்துறையினர் உடற்கூறு ஆய்வு செய்து புதைத்தனர்.
ஆடுகள் பலி
ஆடுகள் பலி
Published on

ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் நேற்று மாலை 4 மணியளவில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது ஸ்ரீமுஷ்ணம் நரிக்குறவர் காலனியை சேர்ந்த சின்னத்துரை மனைவி இன்பவள்ளிக்கு சொந்தமான 8 ஆடுகளும், தென்பாதி பகுதியை சேர்ந்த ராசமாணிக்கம் மகன் ஆறுமுகத்துக்கு சொந்தமான 5 ஆடுகளும் வீட்டின் அருகே மேய்ச்சலில் இருந்தது. அப்போது மின்னல் தாக்கியதில் மேய்ந்து கொண்டிருந்த 13 ஆடுகளும் பலியானது.

இதுபற்றி தகவல் அறிந்த கால்நடை மருத்துவர் கார்த்திகேயன் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மின்னல் தாக்கியதில், செத்த ஆடுகளை பார்வையிட்டதோடு, உடற்கூறு ஆய்வு செய்து, புதைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com