முத்துப்பேட்டை அருகே 103 வயது மூதாட்டி மரணம்

முத்துப்பேட்டை அருகே வயது மூப்பின் காரணமாக சில தினங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த மூதாட்டி நேற்று இறந்தார்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஜாம்புவானோடை வடக்காடு கிராமத்தை சேர்ந்தவர் காசிநாதன் மனைவி கோவிந்தமாள். இவருக்கு (வயது 103). 3 மகனும், ஒரு மகளும், 8 பேரன்களும், 5 பேத்திகளும், 8 கொள்ளு பேரன்களும், 5 கொள்ளு பேத்திகளும் உள்ளனர். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் தினந்தோறும் தனது பணிகளை தானே சுறுசுறுப்புடன் செய்து வந்த மூதாட்டி கோவிந்தமாள் சென்ற சட்டமன்ற தேர்தலில் வீட்டில் இருந்தப்படி தனது தபால் வாக்கை பதிவு செய்தார். 

இந்தநிலையில் வயது மூப்பின் காரணமாக சில தினங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் நேற்று இறந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com