கேரளாவில் 100 கிலோ போதை பொருள் பறிமுதல் - 2 பேர் கைது

கேரளாவில் நடந்த சோதனையில் 100 கிலோ மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருள்
பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருள்
Published on

திருவனந்தபுரம்:

இந்தியாவிற்குள் அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் மற்றும் மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து போதை பொருள் கடத்தப்படும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன.

இதுதவிர்த்து வேறு சில நாடுகளில் இருந்தும் மறைமுக கடத்தல்கள் நடந்து வருகின்றன. இதனை இந்திய போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களை கைது வருகின்றனர்.  போதை பொருளையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் அசாம் மாநிலத்தின் சோனாரி காவன் பகுதியில் 2.076 கிலோ எடை கொண்ட ஹெராயின் என்ற போதை பொருளையும், 101.48 கிலோ எடையுள்ள கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இதேபோல், அசாம் ரைபிள் படை பிரிவினர் மாநில எல்லை பகுதியில் அமைந்த மோரே நகரில் உள்ள 2 இடங்களில் நடத்திய சோதனையில் ரூ.165 கோடி மதிப்பிலான போதை பொருட்களை அவர்கள் கைப்பற்றினர்.

இந்நிலையில், கேரளா மாநிலம் வயநாட்டில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் சந்தேகத்துக்கு இடமான லாரியை மடக்கிப் பிடித்தனர். அதில் இருந்து 100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com