சமரச பேச்சு தோல்வி - வங்கி பணியாளர்கள் சங்கத்தினர் நாளை வேலைநிறுத்தம்

பொதுத்துறை வங்கிகள் இணைப்பு தொடர்பாக மத்திய அரசுடன் வங்கி பணியாளர்கள் சங்கங்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் 3.5 லட்சம் பணியாளர்கள் நாளை வேலைநிறுத்தம் செய்கின்றனர்.
சித்தரிப்பு படம்
சித்தரிப்பு படம்
Published on

புதுடெல்லி:

மத்திய அரசின் வங்கிகள் இணைக்கும் நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும், வங்கிகள் இணைப்பைக் கைவிட்டு வாராக் கடனை வசூலிப்பதில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வங்கி பணியாளர்கள் சம்மேளனம் சார்பில் கூறப்பட்டது.

இந்த நிலையில் வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை எதிர்த்தும், வங்கிகளை முழுக்க முழுக்க தனியார் மயமாக்கும் மத்திய பா.ஜ.க அரசின் இந்த செயலை கண்டித்தும் அகில இந்திய அளவில், அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் மற்றும் இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் அக்டோபர் 22-ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தவுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com