சையத் முஷ்டாக் அலி டிராபி: மும்பையை 94 ரன்னில் சுருட்டி அபார வெற்றி பெற்றது புதுச்சேரி

சையத் முஷ்டாக் அலி டிராபி டி20-யில் மும்பை அணியை 94 ரன்னில் சுருட்டி புதுச்சேரி அபார வெற்றி பெற்றது.
கிரிக்கெட்
கிரிக்கெட்
Published on

சையத் முஷ்டாக் அலி டிராபி டி20-யில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் மும்பை - புதுச்சேரி அணிகள் மோதின. டாஸ் வென்ற புதுச்சேரி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய மும்பை அணி 19 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 94 ரன்னில் சுருண்டது.

ஷிவம் டுபே 28 ரன்களும், ஆகாஷ் பர்கர் 20 ரன்களும், ஜெய்ஸ்வால் 15 ரன்களும் அடித்தனர். புதுச்சேரி அணி சார்பில் 20 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் சாய்த்தார் சாந்த மூர்த்தி.

பின்னர் 95 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலககுடன் புதுச்சேரி அணி களம் இறங்கியது. முதல் மூன்று வீரர்களான எஸ். கார்த்திக் (26), தாமோதரன் ரோஹித் (18 ரன்களும்), ஷெல்டன் ஜாக்சன் (24 ரன்களும்) ஆகியோர் மோதுமான ரன்கள் அடிக்க 19 ஓவரில் 4 விக்கெட் இழப்பற்கு 95 ரன்களை எட்டு அபார வெற்றி பெற்றது.

எலைட் இ பிரிவில் இடம் பிடித்துள்ள மும்பை அணி 4 போட்டிகளிலும் தோல்வியடைந்து கடைசி  இடத்தை பிடித்துள்ளது. கேரளால் 4-ல் மூன்றில் வெற்றி பெற்று 2-வது இடத்தில் உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com