நடத்தையில் சந்தேகம்- மனைவியை கத்தியால் குத்திய பழ வியாபாரி கைது

கோவை போத்தனூர் அருகே நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மனைவியை கத்தியால் குத்திய பழ வியாபாரி போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

கோவை:

கோவை போத்தனூர் அருகே உள்ள மெட்டூரை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 35). பழ வியாபாரி. இவரது மனைவி லட்சுமி (32).

பழனிசாமிக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று பழனிசாமி குடிபோதையில் வீட்டுக்கு சென்றார்.

அப்போது கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பழனிசாமி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து லட்சுமியை கை மற்றும் வயிற்றில் குத்தினார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய லட்சுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை கத்தியால் குத்தி கிழித்த பழனிசாமியை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com