இந்தோனேசியா வெளியுறவு துறை மந்திரியுடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு

இந்தோனேசியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், அந்நாட்டு வெளியுறவு துறை மந்திரியை சந்தித்து பேசினார்.#sushmaswaraj #indonesia
இந்தோனேசியா வெளியுறவு துறை மந்திரியுடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு
Published on

ஜகார்த்தா:

வெளியுறத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஐந்து நாள் சுற்றுப்பயணமாக தென்கிழக்கு ஆசியாவை சேர்ந்த 3 நாடுகளுக்கு செல்கிறார்.

சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக நேற்று தாய்லாந்து சென்று, அந்நாட்டு வெளியுறத்துறை மந்திரி டான் பிரமுத்வினை சந்தித்து பேசினார். அப்போது, தாய்லாந்து நாட்டுடான பாதுகாப்பு, அரசியல் மற்றும் பொருளாதார விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

தாய்லாந்து பயணத்தை முடித்துக் கொண்டு சுஷ்மா சுவராஜ், இன்று இந்தோனேசியா சென்றடைந்தார். அவரை இந்திய தூதரக அதிகாரிகளும், அந்நாட்டு அதிகாரிகளும் உற்சாகமாக வரவேற்றனர்.

இதைத்தொடர்ந்து, இந்தோனேசியாவில் நடைபெறும் இந்தியா - இந்தோனேசியா கூட்டமைப்பில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அதன்பின்னர், இந்தோனேஷிய வெளியுறவு துறை மந்திரி ரெட்னோ மர்சுடியை சுஷ்மா சுவராஜ் சந்தித்து பேசினார். அப்போது இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

சுற்றுப்பயணத்தின் நிறைவாக சிங்கப்பூர் செல்லும் சுஷ்மா சுவராஜ் அந்நாட்டு அதிபரை சந்தித்து, குடியரசு தினவிழாவில் கலந்து கொள்ள வருமாறு அழைப்பு விடுப்பார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #sushmaswaraj  #indonesia #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com