காஷ்மீர் சிறப்பு சட்டத்திற்கு எதிரான புதிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு சலுகை வழங்கும் சட்டத்தை நீக்கக்கோரிய வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. #Article35A #SupremeCourt #AshwiniUpadhyay
காஷ்மீர் சிறப்பு சட்டத்திற்கு எதிரான புதிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
Published on

புதுடெல்லி:

காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கும் சட்டப்பிரிவு 35-ஏக்கு எதிராக டெல்லியை சேர்ந்த 'வீ சிட்டிசன்' என்ற அரசுசாரா அமைப்பு, உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சட்டப்பிரிவு 35-ஏ மற்றும் 370இன் கீழ், சுயாட்சி அதிகாரம் வழங்கப்பட்டிருப்பது, நாட்டின் மற்ற பகுதிகளுக்கு பாகுபாடு காட்டுவதாக இருப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்கு மாநிலத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பிரிவினைவாதிகள் முழு அடைப்பு போராட்டம் நடத்தி எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதற்கிடையே காஷ்மீருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கும் சட்டப்பிரிவை நீக்கக் கோரி பா.ஜ.க. தலைவர் அஷ்வின் உபாத்யாய் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. பிரதான வழக்கின் விசாரணை 31-ம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Article35A #SupremeCourt #AshwiniUpadhyay

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com