கல்குவாரியில் தவறி விழுந்து சூப்பர்வைசர் பலி

கல்குவாரியில் வேலை ஆட்கள் சரியாக வேலை செய்கிறார்களாக என்று பார்க்க சென்ற சூப்பர்வைசர் கால் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
கல்குவாரியில் தவறி விழுந்து சூப்பர்வைசர் பலி
Published on

ஊத்தங்கரை:

தருமபுரி மாவட்டம், ஏரியூரை அடுத்த சோமலிகாடு பகுதியை சேர்ந்தவர் தம்பித்துரை (வயது38). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரை அடுத்த தொவரப்பள்ளியில் தனியார் கல்குவாரியில் சூப்பர் வைசராக இருந்து வந்தார். இவரது மனைவி மஞ்சுளா (35). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

நேற்று காலையில் வழக்கம் போல் தம்பித்துரை கல்குவாரிக்கு வேலைக்கு சென்றார். பின்னர் கல்குவாரியில் வேலை ஆட்கள் சரியாக வேலை செய்கிறார்களா என்று நடந்து சென்று பார்த்தார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி கல்குவாரியில் பள்ளமான பகுதியில் தம்பித்துரை விழுந்தார். 

இதில் பலத்த காயம் அடைந்த அவரை உடனே மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் போகும் வழியிலேயே ஆம்பிலன்சில் தம்பித்துரை பரிதாபமாக உயிரிழந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com