லால்குடி அருகே திருமணமான 6 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை

லால்குடியில் குடும்ப தகராறில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார்.
லால்குடி அருகே திருமணமான 6 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை
Published on

லால்குடி:

லால்குடி அருகே உள்ள தேவன்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் சவரிராஜன். இவரது மகன் அமிர்தராஜ் (வயது 30), கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த 6 மாதத்தி ற்கு முன்பு ரம்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவருக்கும் இடையே கருத்து வேறுபாட்டால் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்றும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் விரக்தி அடைந்த அமிர்தராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வி‌ஷமருந்தை எடுத்து தின்றுள்ளார்.

இதனால் உயிருக்கு போராடிய அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு செல்லும் வழியிலேயே அமிர்தராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த லால்குடி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மனோகரன் அமிர்தராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com