சேலம் கிச்சிப்பாளையத்தில் மனைவியுடன் தகராறு- தூக்கில் தொங்கிய என்ஜினீயர்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த என்ஜினீயர் தூக்கில் தொங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் கிச்சிப்பாளையத்தில் மனைவியுடன் தகராறு- தூக்கில் தொங்கிய என்ஜினீயர்
Published on

சேலம்:

சேலம் கிச்சிப்பாளையம் அண்ணா நகரைச் சேர்ந்தவர் குமரேசன். இவரது மகன் ஹரிஹரன் (வயது 27). இவருக்கும் ரூபிணி என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

என்ஜினீயரிங் பட்டதாரியான ஹரிஹரனுக்கு சரியான வேலை இல்லை என்று கூறப்படுகிறது.

இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்றும் அவர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ஹரிஹரன் வீட்டிலேயே மனைவியின் சேலையில் தூக்குப்போட்டு தொங்கினார். 

இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com