சுதர்சனம் எம்.எல்.ஏ. தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் மீனவர்கள் முற்றுகை

சுதர்சனம் எம்.எல்.ஏ. தலைமையில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.
சுதர்சனம் எம்.எல்.ஏ. தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் மீனவர்கள் முற்றுகை
Published on

ராயபுரம்:

காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே மின் மார்க்கெட் உள்ளது. இது பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை நடைபெற்று வருகிறது.

இங்கு அடிப்படை வசதி இல்லை. எனவே அதன் அருகே வேறு இடத்தில் புதிய மீன் மார்க்கெட் கட்டி திறக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து வசதி இல்லை எனக் கூறி பல மீனவர்கள் அங்கு செல்லவில்லை.

இந்த நிலையில் பழைய மீன் மார்க்கெட்டில் அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து மேம்படுத்த வேண்டும் என்று கூறி மீனவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் இன்று முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.

போராட்டத்துக்கு வட சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இப்போராட்டத்தில் ஆர்.கே. நகர் தி.மு.க. பகுதி செயலாளர்கள் மருது கணேஷ், ஏ.டி. மணி மற்றும் 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர். போராட்ட முடிவில் கலெக்டர் மதிவாணனிடம் மனு கொடுக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com