உ.பி.: குடிபோதையில் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சப்-இன்ஸ்பெக்டர் கைது

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் விளையாடி கொண்டிருந்த சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைதானார்.
உ.பி.: குடிபோதையில் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சப்-இன்ஸ்பெக்டர் கைது
Published on

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம், ராம்பூர் மாவட்டத்தில் கெம்ரி நகரின் அருகேயுள்ள பன்வர்க்கா பகுதியில் போலீஸ் புறக்காவல் நிலையம் ஒன்றுள்ளது. நேற்றிரவு இங்கு குடி போதையில் இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு அருகாமையில் விளையாடி கொண்டிருந்த 7 வயது சிறுமியை கண்டதும் காமம் கண்ணை மறைத்தது.

அந்த சிறுமியை பிடித்து, வலுக்காட்டாயமாக தூக்கிச் சென்று காவலர் குடியிருப்பில் வைத்து அவர் பாலியல் பலாத்காரம் செய்ததால் வந்த கூச்சலை கேட்ட ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு தகவல் அளித்தார். அவர்கள் விரைந்து சென்று அந்த காமுகனிடம் இருந்து சிறுமியை மீட்டனர்.

ஆத்திரமடைந்த மக்கள் போலீஸ் புறக்காவல் நிலையத்தை முற்றுகையிட்டு நடத்திய ஆர்ப்பாட்டத்தின் விளைவாக அந்த சப்-இன்ஸ்பெடர் கைது செய்யப்பட்டு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com