

பாகூர்:
தவளக்குப்பம் நல்லவாடு சுனாமி நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாவாடை (வயது72). இவரது மனைவி அங்கம்மாள் (67). இவர் சம்பவத்தன்று வீட்டில் வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி படிக்கட்டில் விழுந்தார்.
இதில் அங்கம்மாளுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. உடனே அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அங்கம்மாள் இறந்து போனார்.
இதுகுறித்து தவளக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.