திருவண்ணாமலை-குடியாத்தத்தில் தேர்வு கட்டணம் உயர்வை கண்டித்து மாணவர்கள் போராட்டம்

திருவண்ணாமலை மற்றும் குடியாத்தத்தில் தேர்வு கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தினர்.
திருவண்ணாமலையில் அரசு கலைக்கல்லூரி முன்பு திரண்டு மாணவ, மாணவிகள் போராட்டம் செய்த காட்சி.
திருவண்ணாமலையில் அரசு கலைக்கல்லூரி முன்பு திரண்டு மாணவ, மாணவிகள் போராட்டம் செய்த காட்சி.
Published on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை - செங்கம் ரோட்டில் உள்ள அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் தேர்வு கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வகுப்புகளை புறக்கணித்தனர். மேலும் கல்லூரி முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். தேர்வு கட்டணத்தை குறைக்க கோரியும், இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோஷம் எழுபபினர்.

குடியாத்தம் காட்பாடி ரோட்டில் அரசு திருமகள் கலை கல்லூரி இயங்கி வருகிறது. கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் திருவள்ளூர் பல்கலைகழகம் மாணவர்களின் தேர்வு கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் இன்று காலை வகுப்பை புறக்கணித்து கல்லூரி வளாகத்திற்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது  உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணத்தை ரத்து செய்யகோரி கோஷ மிட்டனர் மாணவர்களின் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com