தமிழகத்தில் 71 பி.எட். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த தடை

தமிழகத்தில் 71 பி.எட். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
பி.எட். படிப்பு
பி.எட். படிப்பு
Published on

சென்னை:

ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் 71 பி.எட். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தால் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட 58 கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக இணைப்பு அனுமதி பெறாத 13 பி.எட். கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அடையாளம் காணப்பட்ட 71 கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்திருந்தால் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் பொறுப்பேற்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com