இளம்பிள்ளை அருகே மாணவியை பலாத்காரம் செய்த தொழிலாளி கைது

இளம்பிள்ளை அருகே வீடு புகுந்து மாணவியை மாணவியை பலாத்காரம் செய்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
கைது
கைது
Published on

இளம்பிள்ளை:

இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கணசாலை தூதனூர் பகுதியை சேர்ந்தவர் தனபால் மகன் மணி (வயது 20). கட்டிட தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் 14 வயது பள்ளி மாணவி. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணவியின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். அப்போது மணி, வீடு புகுந்து மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் பெற்றோர் மகுடஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் (பொறுப்பு), சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மணியை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com