விபத்தில் கல்லூரி மாணவர் பலி- காதலியும் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

சாலை விபத்தில் கல்லூரி மாணவர் பலியானதை அறிந்த காதலி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
விபத்தில் கல்லூரி மாணவர் பலி- காதலியும் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு
Published on

திண்டுக்கல்:

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த தவமணி மகன் சீனிவாசன்(வயது22). திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ 2-ம் ஆண்டு படித்து வந்தார். அஞ்சுகுழிபட்டியில் உள்ள உறவினர் வீட்டிலிருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.

சம்பவத்தன்று நத்தம் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தபோது அவ்வழியே வந்த தனியார் பள்ளி வாகனம் அவர் மீது மோதியது. மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

அதே கல்லூரியில் சீனிவாசனுடன் படித்து வந்தவர் பிருந்தாமேரி(19). திண்டுக்கல் முத்தழகுபட்டி கிழக்குதெருவை சேர்ந்த அவர் சீனிவாசனை காதலித்து வந்தார். விபத்தில் அவர் உயிரிழந்ததை அறிந்தவுடன் இன்று காலை வி‌ஷம் குடித்து கல்லூரிக்கு வந்தார்.

சிறிதுநேரத்திலேயே மயக்கமடைந்து விழுந்தார். உடனே அவரது தோழிகள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நகர்தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com