ரகளையில் ஈடுபட்ட பென் ஸ்டோக்ஸ் ஆஸி. செல்லமாட்டார்: ஸ்டீவன் பின் அணியில் சேர்ப்பு

ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா செல்லும் இங்கிலாந்து அணியுடன் பென் ஸ்டோக்ஸ் செல்லமாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
ரகளையில் ஈடுபட்ட பென் ஸ்டோக்ஸ் ஆஸி. செல்லமாட்டார்: ஸ்டீவன் பின் அணியில் சேர்ப்பு
Published on

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 3-வது ஒருநாள் போட்டியில் விளையாடிய பின்னர், நள்ளிரவு கிளப் சென்றார். பின்னர் அங்குள்ள நபர் ஒருவரிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் போலீஸ் அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. அதன்பின் ரலீஸ் செய்தது.

பென் ஸ்டோக்ஸ் ரகளையில் ஈடுபட்ட வீடியோவை போலீசார் வெளியிட்டனர். இந்நிலையில் ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணி வரும் 28-ந்தேதி ஆஸ்திரேலியா புறப்படுகிறது. இங்கிலாந்து அணியுடன் பென் ஸ்டோக்ஸ் செல்லமாட்டார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் ஸ்டீவன் பின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com