2 நாள் வேலை நிறுத்தத்திற்கு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு

ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும், டீசல் விலையை மாதம் ஒருமுறை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2நாள் நடைபெறும் வேலைநிறுத்த போராட்டத்திற்கு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
2 நாள் வேலை நிறுத்தத்திற்கு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு
Published on

சேலம்:

இந்தியா முழுவதும் வருகிற 9-ந் தேதியும், 10-ந் தேதியும் லாரி உரிமையளர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும், டீசல் விலையை மாதம் ஒருமுறை நிர்ணயம் செய்ய வேண்டும். தினமும் விலை நிர்ணயம் செய்யும் முறையை கைவிட வேண்டும். நாடு முழுவதும் 327 சுங்கச்சாவடிகளை மூடிவிட்டு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சுங்கச் சாவடி கட்டணம் வசூலிக்க வேண்டும். நவம்பர் மாதம் பாராளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட உள்ள மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தப் பேராட்டம் நடைபெறுகிறது.

அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனால் இந்தியா முழுவதும் 9-ந் தேதியும், 10-ந் தேதியும் 93 லட்சம் லாரிகள் ஓடாது. தமிழ்நாட்டில் 5 லட்சம் லாரிகள் ஓடாது. இந்த வேலை நிறத்தப்போராட்டத்திறகு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு தெரிவிப்பதாக அந்த சங்கத்தின் மாநில செயலாளர் தன்ராஜ் இன்று நிருபரிடம் கூறினார்.

லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்திற்கு மணல் லாரி உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழக மணல் உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்லராசமணி கூறியதாவது:-

லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்திற்கு தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனமும் ஆதரவு தெரிவிக்கிறது. இதனால் வருகிற 9-ந் தேதியும், 10-ந் தேதியும் தமிழ்நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சம் மணல் லாரிகள் ஓடாது. நாள் ஒன்றுக்கு ரூ.2 கோடி வீதம் 2 நாட்களுக்கு ரூ.4 கோடி இழப்பு ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com