திண்டுக்கல்லில் நட்சத்திர ஆமையுடன் சுற்றிய 8 பேர் சிக்கினர்

திண்டுக்கல்லில் மினிவேனில் நட்சத்திர ஆமையுடன் சுற்றிய 8 பேரிடம் விசாரணை நடத்திய வனத்துறையினர் அவர்களுக்கு அபராதம் விதித்தனர்.
நட்சத்திர ஆமை
நட்சத்திர ஆமை
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் நகரில் நட்சத்திர ஆமையை விற்பனை செய்வதற்கு, ஒரு கும்பல் வந்துள்ளதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சிறுமலை வனச்சரகர் மனோஜ் தலைமையிலான வனத்துறை ஊழியர்கள் திண்டுக்கல் நகர் முழுவதும் சோதனையிட்டனர். அப்போது பஸ்நிலையம் அருகே சந்தேகப்படும் வகையில் நின்ற மினிவேனை வனத்துறையினர் சோதனையிட்டனர். அதில், ஒரு நட்சத்திர ஆமை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஆமையை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும் மினிவேனில் வந்த அரியலூரை சேர்ந்த குப்புசாமி (வயது 50), விஜய், சின்னத்துரை, செந்தில், அன்பரசன், கார்த்திகேயன், அறிவழகன், காத்திகேயராஜன் ஆகிய 8 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், நட்சத்திர ஆமையை சிலர் ராசிக்காக வீட்டில் வளர்ப்பார்களாம். இதனால் அதை விற்பனை செய்வதற்கு திண்டுக்கல்லுக்கு கொண்டு வந்ததாக கூறினர். இதையடுத்து 8 பேருக்கும் தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதில் திண்டுக்கல்லை சேர்ந்த வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்றும் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com