நிர்மலாதேவி வழக்கு 3-ந்தேதிக்கு ஒத்திவைப்பு: ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு உத்தரவு

நிர்மலா தேவி வழக்கின் விசாரணை மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதாக கூறிய நீதிபதி முத்து சாரதா விசாரணையை வருகிற 3-ந்தேதிக்கு ஒத்தி வைப்பதாக தெரிவித்தார். #NirmalaDevi #NirmalaDeviAudioCase
நிர்மலாதேவி வழக்கு 3-ந்தேதிக்கு ஒத்திவைப்பு: ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு உத்தரவு
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்:

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கல்லூரி மாணவிகளை பாலியலுக்கு அழைத்ததாக அதே கல்லூரியை சேர்ந்த பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார்.

அவர் கொடுத்த தகவலின் பேரில் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைதானார்கள்.

இந்த வழக்கு விருதுநகர் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. கைதான 3 பேர் மீதும் 1360 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட செசன்சு கோர்ட்டுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் வழக்கு இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நீதிபதி முத்து சாரதா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதற்காக நிர்மலா தேவி, பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது இந்த வழக்கின் விசாரணை மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதாக கூறிய நீதிபதி முத்து சாரதா விசாரணையை வருகிற 3-ந்தேதிக்கு ஒத்தி வைப்பதாக தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து நிர்மலாதேவி உள்பட 3 பேரும் மதுரை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். #NirmalaDevi #NirmalaDeviAudioCase

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com