நிர்மலாதேவிக்கு ஜாமீன் வழங்கியது ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்

நிர்மலாதேவி ஜாமீன் வழங்கக்கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இதனை விசாரித்த மாஜிஸ்திரேட்டு வழக்கு விசாரணைக்கு முறையாக ஆஜராக வேண்டும் என அறிவுறுத்தி அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
நிர்மலாதேவி
நிர்மலாதேவி
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்:

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கூறி பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணைக்கு வரும்போது நிர்மலாதேவி ஆஜராகவில்லை.

இதையடுத்து மாஜிஸ்திரேட்டு பிடிவாரண்டு பிறப்பித்தார். இதைத் தொடர்ந்து நிர்மலா தேவியை போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

நிர்மலாதேவி ஜாமீன் வழங்கக் கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இதனை இன்று விசாரித்த மாஜிஸ்திரேட்டு வழக்கு விசாரணைக்கு வரும்போது முறையாக ஆஜராக வேண்டும் என அறிவுறுத்தி நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com