

ராமேசுவரம்:
ராமேசுவரத்தைச் சேர்ந்த ரொனால்டு என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 5 மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அவர்கள் நடுக்கடலில் வலையை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது கடலில் வீசிய வலையை எடுக்க முயன்றபோது அதிக பாரம் இருந்தது. உடனே அருகில் இருந்த மீனவர்கள் உதவியுடன் வலையை வெளியே எடுத்தபோது அதில் இலங்கையின் பிளாஸ்டிக் படகு ஒன்று சிக்கி இருந்தது தெரியவந்தது. அதனை மீட்ட மீனவர்கள் ராமேசுவரத்திற்கு கொண்டுவந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த உளவுத்துறை போலீசார் விரைந்து வந்து மீனவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இலங்கை நாட்டின் பிளாஸ்டிக் படகு கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் போது மூழ்கியதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.