பிரதமருக்கு கூடுதல் இலாகா - இலங்கை மந்திரிசபையில் மாற்றம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு கூடுதலாக சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட 3 துறைகளை ஒதுக்கி இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா மந்திரிசபையில் சில மாற்றங்களை செய்துள்ளார். #SriLankanPM #cabinetchange
பிரதமருக்கு கூடுதல் இலாகா - இலங்கை மந்திரிசபையில் மாற்றம்
Published on

கொழும்பு:

இலங்கை அரசின் மந்திரிசபையில் சில மாற்றங்களை செய்ய அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா தீர்மானித்தார். அதன்படி, பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு கூடுதலாக சட்டம் - ஒழுங்கு, தேசிய கொள்கை அமைப்பு மற்றும் பொருளாதார விவகாரங்கள் ஆகிய 3 துறைகளை ஒதுக்கீடு செய்து அதிபர் இன்று உத்தரவிட்டார்.

சட்டம் - ஒழுங்கு துறையை இதுவரை நிர்வகித்துவந்த மந்திரி சகலா ரத்னாயக்கே இளைஞர்கள் நலத்துறை மற்றும் இலங்கை தெற்கு மாகாணங்கள் மேம்பாட்டுத்துறை மந்திரியாக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

நீடித்த மேம்பாடு மற்றும் வனவிலங்கு துறை மந்திரியாக ரவிந்திரா சமரவீரா, உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரியாக கபிர் ஹாஷிம், அயல்நாட்டு வேலைவாய்ப்பு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப கட்டமைப்பு துறை மந்திரியாக ஹரின் பெர்னான்டோ, புணர்வாழ்வு மற்றும் சிறைத்துறை சீரமைப்பு துறை மந்திரியாக அஜித் பெரேரா, இளைஞர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை இணை மந்திரியாக பியசேனா கமாகே, உள்துறை இணை மந்திரியாக ஜே.சி.அலாவாத்துவாலா, தேசிய கொள்கை அமைப்பு மற்றும் பொருளாதார விவகாரங்கள் துறை இணை மந்திரியாக டாக்டர் ஹர்ஷா டி சில்வா ஆகியோரை நியமித்தும் அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். #tamilnews #SriLankanPM #cabinetchange

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com