விடுதலைப்புலிகள் பயன்படுத்திய கப்பல் ஆழ்கடலில் மூழ்கடிப்பு

விடுதலைப்புலிகள் இந்தோனேஷியாவில் இருந்து ஆயுதங்கள் கொண்டுவர பயன்படுத்திய கப்பலை, இலங்கை கடற்படை நேற்று ஆழ்கடலில் மூழ்கடித்தது.
விடுதலைப்புலிகள் பயன்படுத்திய கப்பல் ஆழ்கடலில் மூழ்கடிப்பு
Published on

விடுதலைப்புலிகள் இந்தோனேஷியாவில் இருந்து ஆயுதங்கள் கொண்டுவர பயன்படுத்திய கப்பலை, இலங்கை கடற்படை நேற்று ஆழ்கடலில் மூழ்கடித்தது. இந்த கப்பலை முன்பு மலேசியாவில் இலங்கை கடற்படை கைப்பற்றி, கொழும்புக்கு கொண்டு வந்து வைத்திருந்தது.

இதுபோல், இலங்கை முன்னாள் அதிபர்கள் ஜெயவர்த்தனா, பிரேமதாசா, சந்திரிகா, ராஜபக்சே, விடுதலைப்புலி முன்னாள் தளபதி கருணா ஆகியோர் பயன்படுத்தி வந்த குண்டு துளைக்காத வாகனங்களையும் இலங்கை கடற்படை ஆழ்கடலில் மூழ்கடித்தது. வாகனங்களில் இருந்த தகவல் தொடர்பு சாதனங்களையும் உடைத்து எறிந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com