என் மலர்
விளையாட்டு

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன்: நடப்பு சாம்பியனுக்கு அதிர்ச்சி அளித்த லக்ஷயா சென்
- ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது.
- இந்தியாவின் லக்ஷயா சென் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
பெர்மிங்காம்:
ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் இங்கிலாந்தில் இன்று தொடங்கியது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், சீனாவின் ஷி யூகீ உடன் மோதினார்.
இதில் பொறுப்புடன் ஆடிய லக்ஷயா சென் முதல் செட்டை 23-21 என கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக 2வது செட்டை சீன வீரர் 21-19 என வென்றார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை லக்ஷயா சென் 21-17 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி அசத்தினார்.
நடப்பு சாம்பியனான சீன வீரர் ஷி யூகி தோல்வி அடைந்ததன் மூலம் தொடரில் இருந்து வெளியேறினார்.
Next Story






