இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி: சாத்விக்- சிராக் ஜோடி இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம்

இந்திய ஜோடி 21-13, 21-13 என்ற செட் கணக்கில் இந்தோனேசிய ஜோடியை வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.தென் கொரியாவின் கேங், சியோ ஜோடியை 17-21, 21-19, 21-18 செட் கணக்கில் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம்.
இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி: சாத்விக்- சிராக் ஜோடி இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம்
Published on

இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகார்த்தாவில் உள்ள இஸ்டோராவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற இரட்டையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்திய ஜோடி சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி உலகின் நம்பர் ஒன் ஜோடியான ஃபஜர் அல்ஃபியன், முகம்மது ரியான் ஆர்டியான்டோவுடன் மோதியது.

இதில் இந்திய ஜோடி 21-13, 21-13 என்ற செட் கணக்கில் இந்தோனேசிய ஜோடியை வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

இந்நிலையில், இன்று நடந்த இரட்டையர் பிரிவு அரையிறுதி போட்டியில் இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி, தென் கொரியா கேங், சியோ ஜோடியுடன் போட்டியிட்டனர்.

இந்த ஆட்டத்தில், தென் கொரியாவின் கேங், சியோ ஜோடியை 17-21, 21-19, 21-18 செட் கணக்கில் வீழ்த்தி இந்தியாவின் சாத்விக்- சிராக் ஜோடி வெற்றிப்பெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com