search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆசிய விளையாட்டு 2023 - ஆண்கள் கபடியில் இந்திய அணி வென்று அரையிறுதிக்கு முன்னேறியது
    X

    ஆசிய விளையாட்டு 2023 - ஆண்கள் கபடியில் இந்திய அணி வென்று அரையிறுதிக்கு முன்னேறியது

    • ஆண்கள் கபடியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
    • நாளை நடைபெறும் அரையிறுதியில் பாகிஸ்தானுடன் மோதுகிறது.

    பீஜிங்:

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இன்று நடைபெற்ற ஆண்கள் கபடி போட்டி லீக் ஆட்டத்தில் இந்திய அணி சீன தைபே அணியை எதிர்கொண்டது.

    இதில் இந்திய அணி 50-27 என வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் அரையிறுதிக்கும் தகுதி பெற்றது. நாளை நடைபெறும் அரையிறுதியில் இந்திய அணி பாகிஸ்தானுடன் மோதுகிறது.

    Next Story
    ×