search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    25 சாம்பியன் பட்டம் வென்றும் இந்த வீரருக்கு போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை- டுவிட்டரில் மேற்கோள் காட்டிய உத்தப்பா
    X

    பங்கஜ் அத்வானி - ராபின் உத்தப்பா

    25 சாம்பியன் பட்டம் வென்றும் இந்த வீரருக்கு போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை- டுவிட்டரில் மேற்கோள் காட்டிய உத்தப்பா

    • உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் பங்கஜ் அத்வானி சாம்பியன் பட்டம் வென்றார்.
    • 37 வயதான பங்கஜ் அத்வானி பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கரில் பல்வேறு வகையான உலக போட்டிகளில் கைப்பற்றிய 25-வது சாம்பியன் பட்டம் இதுவாகும்.

    உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடந்தது. இதற்கான இறுதிப்போட்டியில் இந்திய வீரர் பங்கஜ் அத்வானி 4-0 என்ற கணக்கில் சக வீரர் சவுரவ் கோத்தாரியை எளிதில் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார். மகாராஷ்டிராவைச் ர்ந்த 37 வயதான பங்கஜ் அத்வானி பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கரில் பல்வேறு வகையான உலக போட்டிகளில் கைப்பற்றிய 25-வது சாம்பியன் பட்டம் இதுவாகும்.

    25 சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த பங்கஜ் அத்வானிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா வாழ்த்து தெரிவித்துள்ளார்.


    இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்த மனிதரின் சாதனைகளுக்கு போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.

    25 உலக சாம்பியன்ஷிப் பட்டம். என் சாம்பியனுக்கு

    வாழ்த்துக்கள். உங்கள் விளையாட்டின் மீதான உங்கள் ஆர்வமும் அர்ப்பணிப்பும் முடிவில்லாதது. என் சகோதரனே உன்னை என்றும் நேசிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×