என் மலர்
கிரிக்கெட் (Cricket)

VIDEO: மும்பையில் பானி பூரியை பொளந்துகட்டிய அமெரிக்க வீரர்கள்
- கடந்த 2-ந் தேதி இந்தியா ஏ அணிக்கு அமெரிக்கா அணிக்கும் பயிற்சி போட்டி நடைபெற்றது.
- இதில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டெல்லி:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவை வருகிற 7-ந்தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் சந்திக்கிறது.
அதற்கு முன்னதாக பயிற்சி போட்டிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த 2-ந் தேதி இந்தியா ஏ அணிக்கு அமெரிக்கா அணிக்கு பயிற்சி போட்டிகள் நடைபெற்றது. இதில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள அமெரிக்க அணி வீரர்கள் மும்பையில் உள்ள தள்ளுவண்டி கடையில் பானி பூரி சாப்பிட்டு மகிழ்ந்தனர். இந்தியா வந்து பானி பூரி சாப்பிடாமல் போன அந்த சுற்றுப்பயணம் முழுமை பெறாததாக இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்க அணிக்கு தேர்வான 15 வீரர்களில் 9 பேர் இந்திய வம்சாவளியினர் என்பது குறிப்பிடத்தக்கது.






