என் மலர்
கிரிக்கெட் (Cricket)

டி20 உலகக்கோப்பை: ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள் - இந்தியாவை திணறவைத்த USA
- அபிஷேக் சர்மா தனது முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார்.
- துபே முதல் பந்தில் டக் அவுட்டானார்.
10-வது ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. இந்தத் தொடரை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன.
முதல் நாளில் 3 போட்டிகள் நடக்கிறது. முதல் போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தானும் 2 ஆவது போட்டியிலும் ஸ்காட்லாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றி பெற்றது.
இன்று இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடப்பு சாம்பியன் இந்தியா-அமெரிக்கா அணிகள் மோதுகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 6 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 46 ரன்கள் எடுத்து திணறி வருகிறது. அபிஷேக் சர்மா தனது முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். 6 ஆவது ஓவரில் மட்டும் 3 விக்கெட்டுகளை இந்தியா இழந்தது. இஷான் கிஷன் 20 ரன்னிலும் திலக் வர்மா 25 ரன்னிலும் அவுட்டாக துபே முதல் பந்தில் டக் அவுட்டாகினார்.






