என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டி20 உலகக் கோப்பை 2026: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 133 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நேபாளம்
    X

    டி20 உலகக் கோப்பை 2026: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 133 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நேபாளம்

    • தீபிந்திர சிங் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
    • ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இதில் நடைபெற்ற 25வது லீக் போட்டியில் நேபாளம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    இதையடுத்து பேட்டிங் செய்த நேபாளம் அணி ஆரம்பத்திலேயே விக்கெட் இழந்து தடுமாறியது. அந்த அணியின் துவக்க வீரர்கள் குஷல் (1), ஆசிஃப் (11) ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ரோகித் பௌடெல் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

    இவருடன் விளையாடிய தீபிந்திர சிங் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 47 பந்துகளில் 58 ரன்கள் (3 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) அடித்து அசத்தினார். இவரைத் தொடர்ந்து ஆடியவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க கடைசியில் களமிறங்கிய குல்சன் (11) மற்றும் சோம்பல் கமி 15 பந்துகளில் 26 ரன்கள் (4 பவுண்டரிகள்) அடித்தார். இதனால் நேபாளம் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்களை சேர்த்தது.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும், அகீல் ஹொசைன், மேத்யூ ஃபோர்டீ, ஷமர் ஜோசப் மற்றும் ரோஸ்டன் சேஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    Next Story
    ×