முதல் 10 ஓவரில் அதிரடி காட்டி.. அடுத்த 10 ஓவரில் பம்மிய தென் ஆப்பிரிக்கா.. உணவு இடைவேளை வரை 105/ 3

வியான் முல்டர் 22 ரன்னிலும் டோனி டி சோர்ஜி 15 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். இந்திய தரப்பில் பும்ரா 2 விக்கெட்டும் குல்தீப் 1 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.
முதல் 10 ஓவரில் அதிரடி காட்டி.. அடுத்த 10 ஓவரில் பம்மிய தென் ஆப்பிரிக்கா.. உணவு இடைவேளை வரை 105/ 3
Published on

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது.

அதன்படி இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் இன்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

அதன்படி தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக மார்க்ராம், ரியான் ரிக்கல்டன் களமிறங்கினர். இந்த பும்ரா ஓவரை மட்டும் தடுத்து ஆடினார். சிராஜ் ஓவரை சிக்சரும் பவுண்டரியுமாக பறக்க விட்டனர். இதனால் அக்சர் படேலுக்கு ஓவர் கொடுக்கப்பட்டது. அவர் ஓவரையும் அதிரடியாக விளையாடினர்.

இந்த ஜோடி முதல் 10 ஓவருக்கு 57 ரன்கள் எடுத்தது. 11-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் ரிக்கல்டன் போல்ட் ஆகி வெளியேறினார். அவர் 22 பந்தில் 23 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதனை தொடர்ந்து 13-வது ஓவரை மீண்டும் பும்ரா வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் மார்க்ரம் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 31 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

அடுத்து வந்த கேப்டன் பவுமா, 3 ரன்னில் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் துருவ் ஜூரலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதனையடுத்து வியான் முல்டர்- டோனி டி சோர்ஜி ஜோடி நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதனால் முதல் நாள் உணவு இடைவேளை வரை தென் ஆப்பிரிக்கா 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 105 ரன்கள் எடுத்தது. வியான் முல்டர் 22 ரன்னிலும் டோனி டி சோர்ஜி 15 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

இந்திய தரப்பில் பும்ரா 2 விக்கெட்டும் குல்தீப் 1 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com