ஆஸ்திரேலியா வீரரை தொடர்ந்து ஆஷஸ் தொடரில் இருந்து இங்கிலாந்து வீரர் விலகல்

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹெசில்வுட் காயம் காரணமாக ஆஷஸ் தொடரில் இருந்து விலகினார். அவரை தொடர்ந்து இங்கிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளரும் விலகி உள்ளார்.
ஆஸ்திரேலியா வீரரை தொடர்ந்து ஆஷஸ் தொடரில் இருந்து இங்கிலாந்து வீரர் விலகல்
Published on

அடிலெய்டு:

இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா முதல் 2 போட்டியிலும் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதனையடுத்து இரு அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டுவில் நாளை தொடங்குகிறது. இந்த போட்டிக்காக இரு அணிகளும் தீவிர வலை பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹெசில்வுட் காயம் காரணமாக ஆஷஸ் தொடரில் இருந்து விலகிய நிலையில் இங்கிலாந்து அணியிலும் ஒரு வீரர் தொடரில் இருந்து விலகி உள்ளார்.

அதன்படி இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் காயம் காரணமாக 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடாத நிலையில் மீதமுள்ள போட்டியில் இருந்து மார்க் வுட் விலகி உள்ளார். அவருக்கு மாற்று வீரராக மேத்யூ ஃபிஷர் எச் இங்கிலாந்து அணியில் இணைகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com