U19 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.7.50 கோடி பரிசு - பிசிசிஐ அறிவிப்பு

இளையோர் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி ஜிம்பாப்வேயில் உள்ள ஹாராரேயில் நேற்று நடைபெற்றது.இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 6வது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.
U19 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.7.50 கோடி பரிசு - பிசிசிஐ அறிவிப்பு
Published on

19 வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி ஜிம்பாப்வேயில் உள்ள ஹாராரேயில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 411 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியில் மிரட்டினார். அவர் 80 பந்தில் 15 சிக்சர், 15 பவுண்டரி விளாசி 175 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அடுத்து ஆடிய இங்கிலாந்து அணியில் பால்கெனர் தனி ஆளாகப் போராடினார். அவர் 67 பந்தில் 115 ரன்கள் எடுத்து அவுட்டானார். இறுதியில் இங்கிலாந்து 40.2 ஓவரில் 311 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன், 6வது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.

இந்நிலையில் U19 உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.7.50 கோடி பரிசு வழங்கப்படும் என பிசிசிஐ செயலாளர் அறிவித்துள்ளார்.

பட்டம் வென்று தேசத்துக்கு பெருமை சேர்த்த இந்திய அணிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய சீனியர் வீரர் விராட் கோலி, பயிற்சியாளர் கம்பீர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com