என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டி20 கிரிக்கெட்டில் முதல் அணியாக சாதனை படைத்த இந்தியா
    X

    டி20 கிரிக்கெட்டில் முதல் அணியாக சாதனை படைத்த இந்தியா

    • இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.
    • இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 10 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 155 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 (5) என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இந்நிலையில் இந்த வெற்றியின் மூலம் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி பல சாதனைகளை படைத்துள்ளது.

    அந்த வகையில் இரு நாட்டு டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி தொடர்ச்சியாக கைப்பற்றிய 9-வது தொடர் இதுவாகும். இந்த வகையில் பாகிஸ்தான் முதலிடத்தில் (10 தொடர் வெற்றி) உள்ளது.

    இரு நாட்டு தொடருடன், 20 ஓவர் உலகக் கோப்பை மற்றும் ஆசிய கோப்பையையும் சேர்த்தால் இந்திய அணி தொடர்ச்சியாக தனதாக்கிய 11-வது தொடராக இது அமையும்.

    154 ரன் இலக்கை இந்திய அணி 60 பந்துகள் மீதம் வைத்து எட்டிப்பிடித்துள்ளது. முழு உறுப்பினர் நாடுகள் இடையே நடந்த டி20 கிரிக்கெட்டில் 150 ரன்னுக்கு மேலான இலக்கை 10 ஓவர் மீதம் வைத்து எட்டிப்பிடித்த முதல் அணி இந்தியா தான்.

    Next Story
    ×